பிரித்தானியாவில் ஏரியில் மூழ்கிய காரில் இருந்து முதியவர் ஒருவரின் உயிரை 3 பேர் தைரியமாக காப்பற்றியுள்ளனர்.
Hertfordshire மாகாணத்தில் வயதான முதியவர் ஒருவர் கார் ஓட்டி வந்த போது எதிர்பாராத விதமாக அங்குள்ள ஏரி ஒன்றில் அவரது கார் பாய்ந்துள்ளது.
இதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில், தனது 2 குழந்தைகளுடன் அங்கிருந்த 34 வயது Hannah என்ற பெண் மட்டும் உதவி கேட்டு கத்தியுள்ளார்.
பின்னர் ஏரியை நோக்கி சென்று அந்த பெண் சற்றும் யோசிக்காமல் ஏரியில் குதித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவருடன் 2 பேரும் உதவிக்கு சென்றனர்.
இந்நிலையில் அவர்கள் மூழ்கிக் கொண்டிருந்த காரின் கதவை உடைத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த நபரை மீட்டனர்.
இது குறித்து Hannah கூறுகையில், ”என்னால் ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் இருப்பதை காண முடிந்தது. இதனாலே நான் உதவி கேட்டு கத்தினேன்.
நான் அவருடன் கதவின் வழியாக பேசிக் கொண்டிருக்கும் போது கார் வேகமாக மூழ்கிக் கொண்டிருந்தது. அவரை ஒரு வழியாக மீட்டுவிட்டோம். எல்லாம் வேகமாக நடந்து முடிந்து விட்டது” என்றார்.