ஆரோக்கியமற்ற உணவுகள், முதுகில் அடி படுதல், பலவீனமான எலும்புகள், வயதாகுதல், வாதம், எலும்பு தொற்று மற்றும் தசை நார்களில் தொற்றுக்கள் போன்ற காரணத்தினால் கடுமையான முதுகு வலி ஏற்படுகிறது.
இத்தகைய முதுகுவலி பிரச்சனையை எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் குணமாக்க இயற்கையில் பல தீர்வுகள் உள்ளது.
தேவையான பொருட்கள்
- லாவண்டர் எண்ணெய்
- பெப்பர் மின்ட் ஆயில்
செய்முறை
- ஒரு பெளலில் தேவையான அளவு லாவண்டர் மற்றும் பெப்பர் மின்ட் ஆயிலை எடுத்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முதுகு முழுவதும் சமமாக தடவி 20 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
- இம்முறையை தினமும் ஒரு முறை என்று இரண்டு வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால், முதுகு வலியில் இருந்து நல்ல மாற்றத்தைக் காணலாம்.
நன்மைகள்
- லாவண்டர் ஆயிலில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகம் உள்ளது. எனவே இது சரும துளைகள் வழியாக தசைகளுக்கு சென்று அந்த பகுதியில் உள்ள அழற்சி மற்றும் வலியை குறைக்கிறது.
- பெப்பர் மின்ட் ஆயிலை பயன்படுத்துவதால், முதுகு பகுதியின் ரத்தோட்டத்தை அதிகரித்து, முதுகில் ஏற்படும் வலியை குறைக்க உதவுகிறது.
- முதுகு வலியை தடுக்க அழற்சி உண்டாக்கும் எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். அதோடு எளிதான உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும்.