முன்னணியின் பிரச்சார விளம்பரங்களில் மஹிந்தவின் புகைப்படங்கள் நீக்கம்?

292
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரச்சார விளம்பரங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புகைப்படங்களை பயன்படுத்துவதை தவிர்க்க முன்னணி பிரச்சார குழு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஏற்படுகின்ற மோதல்களை தவித்துக் கொள்ளவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் சில நாட்களுக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இணக்கப்பாட்டொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இருவருக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, அதன் ஊடாக முன்னணியின் பிரச்சாரத்திற்காக அனுகூலங்களை பெற்று கொள்ள இரு தரப்பின் ஆலோசகர்கள் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE