ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரான எம்.எல்.எம். அபுசாலியின் இளைய சகோதரரான எம்.எம். சலீம் பலாங்கொடையில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சலீம் தனித்து தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஒரு நபரோ அல்லது குழுவினரோ நேற்று முன்தினம் இரவு வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சலீமுக்கு 87 வயது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
எம்.எல்.எம். அபுசாலி, ஜே.ஆர். ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச மற்றும் டி.பி. விஜேதுங்க ஆகிய ஜனாதிபதிகளின் அரசாங்கங்களில் அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.