முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக கூறி தொடுக்கப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணத்தில் 600 பீ.ஐ. குழாய்கள் கொள்வனவு செய்யப்பட்டு, கூட்டுத்தாபனத்திற்கு சுமார் பத்து லட்சம் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹலிய மற்றும் சில ரூபாவாஹினிக் கூட்டுத்தாபன அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த குழாய்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கெஹலிய உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அறிவித்துள்ளார்