முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே காலமானார்

127

முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார். முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே, வட மாகாண முன்னாள் ஆளுநராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. நேற்று (12) இரவு அவர் திடீர் சுகயீனமடைந்ததை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

பாராளுமன்ற உறுப்பினர், வெகுஜன ஊடக அமைச்சர், சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு அமைச்சர், விமான போக்குவரத்து அமைச்சர், நீதி பிரதி அமைச்சர், மேல் மாகாண முதலமைச்சர், வடமாகாண ஆளுநர், தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையின் தலைவர் மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (ளுடுசுஊ) தலைவர் என பல பதவிகளை அவர் வகித்துள்ளார்.

SHARE