முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெறச் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால குற்றம் சாட்டியுள்ளார்.

262

 

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெறச் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால குற்றம் சாட்டியுள்ளார்.
17nov2005

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின் போது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது சுதந்திரக் கட்சியின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு நான் தலைமை தாங்கவுள்ளதாக அறிவித்தவுடன் பலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருசில அமைச்சர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இது குறித்து விமர்சித்துள்ளமை குறித்து எனக்கு அறியக் கிடைத்துள்ளது.

மறுபக்கத்தில் கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயரில் சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க விமல் வீரவங்ச தரப்பினர் முயற்சிக்கின்றனர்.

அதன் மூலம் கட்சிக்குள் என்னைப் பலவீனப்படுத்தி, அவர்கள் தங்கள் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

எனினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சியை வெல்ல வைப்பதற்கான திட்டங்கள் எம்மிடம் தயாராக உள்ளது.

அதே நேரம் எமது கட்சியை பிளவுபடுத்த முயலும் விமல் போன்றோரின் திட்டத்திற்கு பலியாகி விடவோ, அவர்களை நம்பவோ கூடாது என்றும் ஜனாதிபதி மைத்திரி தனது கட்சி முக்கியஸ்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SHARE