முன்னாள் கணவனிடம் இருந்து ரூ.6,500 கோடி ஜீவனாம்சம் பெறும் பெண்

173

பிரித்தானிய நாட்டை சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் ஒருவர் தனது முன்னாள் மனைவிக்கு ரூ.6,500 கோடிக்கு மேல் ஜீவனாம்சம் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் ரிச்சார்ட் கேரிங்(68). தலைநகரான லண்டனில் உள்ள The Ivy, Le Caprice உள்ளிட்ட பல ஆடம்பர ஹொட்டல்களுக்கு இவர் தான் முதலாளி.

45 ஆண்டுகளுக்கு முன்னர் ஜாக்குயி(67) என்ற பெண்ணை ரிச்சார்ட் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஹொட்டல்கள் மட்டுமின்றி அழகு சாதனங்களை தாயாரிக்கும் நிறுவனங்களை நடத்தி வரும் ரிச்சார்ட்டின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு 700 மில்லியன் பவுண்ட் ஆகும்.

எனினும், அண்மைக்காலமாக இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் மனைவியை ரிச்சார்ட் விவாகரத்து செய்துள்ளார்.

விவாகரத்திற்கு முன்னதாகவே பிரேசில் நாட்டை சேர்ந்த 35 வயதான Patricia Mondinni என்று பெண்ணுடன் ரிச்சார்ட்டிற்கு உறவு இருந்துள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளையும் உள்ளார்.

ரிச்சார்ட் தனது மனைவியான ஜாக்குயியை விவாகரத்து செய்ததை தொடர்ந்து, தனது இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து தற்போது வசித்து வருகிறார்.

முதல் மனைவிக்கு விவாகரத்து வழங்கியுள்ளதால் அவருக்கு ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பான வழக்கில் தற்போது ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் மனைவிக்கு ரிச்சார்ட் 350 மில்லியன் பவுண்ட்(65,39,57,39,062 இலங்கை ரூபாய்) ஜீவனாம்சம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், பிரித்தானிய நாட்டிலேயே ஒருவர் அதிகளவில் ஜீவனாம்சம் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE