முன்னாள் காதலி பற்றி சொன்ன டோனி: மனைவி சாக்க்ஷி என்ன சொல்லி இருப்பார்?

256

625-500-560-350-160-300-053-800-748-160-70-6

இந்திய கிரிக்கெட் வீரர் டோனி தன்னுடைய வாழ்க்கை வரலாற்று படத்தை மனைவி சாக்க்ஷியுடன் பார்த்து ரசித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “எம்.எஸ். டோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி” இன்று உலகம் முழுவதும் வெளியானது.

இந்தப் படம் வெளியாகியுள்ள தியோட்டர்களில் எல்லாம் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் படத்தை பார்க்க டோனி, தனது மனைவி சாக்க்ஷியுடன் சென்றுள்ளார். தியேட்டருக்கு வந்த டோனி ராணுவ வீரர் போல் உடையணிந்து கம்பீரமான தோற்றத்துடன் காணப்பட்டார்.

இந்தப் படத்தில் டோனி தன்னுடைய முன்னாள் காதலி பற்றியும் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்து விட்டு அவரது மனைவி என்ன சொன்னார் என்பது தான் தெரியவில்லை.

SHARE