றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக முன்னாள் காவற்துறை மா அதிபர் என்.கே.இளங்ககோன் கைது செய்யப்படவேண்டும் என அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
முன்னாள் காவற்துறை மா அதிபர் இந்த சம்பவத்தை மறைக்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் பிரபல றக்பி வீரர் ஒருவரின் கை கால்களை உடைத்து , பற்களை உடைத்து ஆணுறுப்பை சிதைத்துள்ளனர்.
இது சம்பந்தமாக காவல் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அனுர சேனாநாயக்க அது போல் இதற்கு முன்னாள் காவற்துறை மா அதிபர் இளங்ககோன் அவர்களையும் விடமுடியாது.
குறித்த சம்பவம் தொடர்பாக அறிந்திருந்தும் இவர் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வில்லை .
எனவே இவரையும் கைது செய்ய வேண்டும் ….என பிரதி அமைச்சர் தெரிவித்திருந்தார் .