முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய சிஐடியில் முன்னிலையானார்

93

 

கெஹலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்குவதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல இன்று(2) காலை 9 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதாக கூறப்படுகிறது.

போலி மனித இம்யூனோகுளோபிளின் மருந்து இறக்குமதி தொடர்பான கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதிமன்றில் நேற்று(1) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்னிலையானார் கெஹலிய
விசாரணைகளின் பின் இன்று(2)வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE