முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டார் …

271

 

2ஆம் இணைப்பு - தோல்வியை ஏற்கவில்லை! டுவிட்டரில் மறுத்தார் - மகிந்த தகவல்:-

தோல்வியை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்ததாக சர்வதேச ஊடகமான ஏ.எவ்.பி செய்திச் சேவை தகவல் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், இன்னமும் உத்தியோகபூர்வமான இறுதி முடிவு கிடைக்கவில்லை எனவும், இதற்கமைய வெற்றியையோ தோல்வியையோ ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் செய்தியில் சற்று முன்னர் அறிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டார் ...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.

சர்வதேச ஊடகமான ஏ.எப்.பி க்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற தேர்தலில் தாம் தோல்வியைத் தழுவியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஒப்புக்கொண்டுள்ளார்.

எவ்வாறெனினும் பாராளுமன்ற உறுப்பினராக தாம் கடமையாற்றப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

“பிரதமராகும் எனது கனவு கலைந்து போனது” “நான் தோல்வியை ஒப்புக் கொள்கின்றேன்” “நல்ல போட்டியின் பின்னர் தோல்வியடைந்தோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதித் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பதற்கு முன்னதாகவே தோல்வியை ஒப்புக் கொள்வதாக மஹிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எட்டு மாவட்டங்களிலும், ஐக்கிய தேசியக் கட்சி 11 மாவட்டங்களிலும்வெற்றியீட்டி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, மொத்தமாக 22 மாவட்டங்களின் அடிப்படையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எஞ்சியுள்ள மூன்று மாவட்டங்களும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களாகும்.

இன்று நண்பகல் அளவில் கட்சி ரீதியான முடிவுகளை வெளியிட முடியும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் இவ்வாறு தெரிவித்த தாக ஏ.ப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

 

தோல்வியை ஏற்றார் மகிந்த! பிரதமர் பதவி கனவு பொய்த்துப் போனது!
பிரதமர் கனவு பொய்த்துப் பொய்த்துப் போனதாக

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக ஏ.எவ்.பி. சர்வதேச செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் குருணாகல் மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிட்டிருந்தார்.

பிரதமர் பதவியை இலக்குவைத்தே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் மகிந்த ராஜபக்ச களமிறக்கப்பட்டிருந்தார்.

8ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிவுகளில் பெரும்பாலானவை வெளிவந்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தற்போது முன்னிலை வகிக்கிறது.

இதுவரை வெளிவந்துள்ள முடிவுகளுக்கமைய ஐக்கிய தேசியக் கட்சி 105 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 82 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளும் என அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

SHARE