முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளனர்.
கடந்த 21ம் திகதி நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூடட்டமைப்பு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களான தொண்டமானும் ஹக்கீமும் ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறெனினும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஓர் வேட்பாளராக போட்டியிடச் செய்யுமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.
மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக பெயரிட்டு பொதுத் தேர்தலில் போட்டியிடச் செய்வது சிறுபான்மை வாக்குகளை இழக்கச் செய்யலாம் என தொண்டமானும் ஹக்கீமும் சுட்டிக்காட்டியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.