முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ.கே இந்திக காலமானார்

215

ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ.கே இந்திக காலமானார்.

கொழும்பில் உள்ள அன்னாரது வீட்டில் நேற்று (05) இரவு, இவர் காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 51.

அன்னாரின் பூதவுடல் பிரேத பரிசோதணைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

2010 – 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீ.கே இந்திக, பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.மேலும், 1990 ஆம் ஆண்டில் தென் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதுடன், தென் மாகாணத்தில் பல அமைச்சுப் பொறுப்புக்களில் இவர் கடமையாற்றி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

SHARE