முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு குள்ளநரி பாராளுமன்ற மீள் வருகை ஆபத்தானது

444

இன்றைய அரசியல் சூழ்நிலையில் அதிகரித்துவருகின்ற கொரோனா வைரசின் தாக்கம் ஒருபுறமிருக்க சீனா ஆக்கிரமிப்பு மறுபக்கத்திலிருக்க இலங்கை நாடு துண்டாடப்படுகின்ற ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்றுவது யார்? என்ற கேள்விக்கு விடையாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களை களமிறக்குவதற்கு சிங்கள அரசியல் தலைமைகள் பலரும் முயற்சிக்கின்றனர். இவர் 3 தடவைகள் பிரதமராக இருந்தும் இடைக்கால நிர்வாகம், பேச்சுவார்த்தைகள் என நாட்களையும் காலங்களையும் வீணடித்து தமிழ் மக்களுக்கான வடகிழக்கிணைந்த தமிழர் தாயகத்தை தருகின்றேன் என போலி பரப்புரை செய்து ஏமாற்றத்திற்கு மேல் ஏமாற்றத்தை கொடுத்தவர். விடுதலைப்புலிகளின் பிளவுக்கு மிக முக்கியமான சூத்திரதாரியாக செயற்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுதலைப்புலிகளை ஆயுத முனை கொண்டு கருணா இருக்கும் வரை அழித்துவிட முடியாது என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தார்.

ஆகவே எப்படியாவது பிரபாகரனிடத்திலிருந்து கருணாவை பிளவுபடுத்துவதனூடகாவே விடுதலைப்பலிகள் அமைப்பை பலவீனப்படது;த முடியும் என்ற முடிவுக்கு வந்தார். சிங்கள தெசத்தின் ஆட்சியாளர்களை பொறுத்தவரையில் தமது இனத்தில் பற்று கொண்டவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஒருவர் தருவது போல் நடிப்பார். மற்றையவர் தனது அடாவடித்தனத்தை காட்டுவார். புhரியளவில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற பொழுது சமாதானப் பேச்சுவார்த்தைகள் எனக் கூறி ஆயுதங்களை களஞ்சியப்படுத்தி மீண்டும் போருக்கான உத்திகளை மேற்கொண்டார்.  UNB கட்சியை பொருத்தவரையிலும் அன்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன கூறியதொரு விடயம் போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்பதே இந்த UNB அரசாங்கத்தில் தான் இந்த நாட்டில் பல படுகொலைகள் இடம்பெற்றது.

குறிப்பாக 300 மாணவர்கள் ஒரே நேரத்தில் சமாதியாக்கப்பட்டார்கள். அதனுடைய சிறு பகுதியை நாம் இங்கு தருகின்றோம்.

புலிகளால் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்ட ஜனாதிபதி பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டுஇ தன்னை ஒரு காருண்யம் நிறைந்த மனித உரிமைவாதி என்பது போலப் பேசி வருகிறார். ஆனால் அவரது தகப்பனார் ஆர.பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜே.வி.பி. இயக்கம் நடத்திய இரண்டாவது (1987 – 1989) ஆயுதக் கிளர்ச்சியை அடக்குவதாகச் சொல்லிக் கொண்டு ஏறத்தாழ 60இ000 (அறுபதபயிரம்) சிங்கள மக்களை அவரது அரசு கொன்று குவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். இந்த நிகழ்வை இன்று பலர் மறந்துபோய் அல்லது மறைத்து அரசியல் செய்து வருகின்றனர்.

இந்தக் கொலைகளில் அதிர்ச்சியூட்டும் கொடூரமான விடயம் என்னவெனில்இ எம்பிலிபிட்டடிய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற சுமார் 300 மாணவர்களை பிரேமதாச அரசின் கூலிப்படையினர் பிடித்துச் சென்றுஇ கூட்டாகக் கொலை செய்துஇ சூரியகந்த என்ற இடத்தில் புதைத்தமையாகும். அவர்களைக் கொலை செய்ததிற்கான ஒரேயொரு காரணம் அவர்கள் அனைவரும் ஜே.வி.பி. ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தினாலாகும்.

இந்த மாணவர்களின் புதைகுழி 1994இல் அடையாளம் காணப்பட்டு தோண்டிப் பார்த்ததில் மாணவர்களின் ஏராளமான எலும்புக் கூடுகள் காணப்பட்டன.

அதேபோலஇ 1989இல் பொலிசாரால் கொலை செய்யப்பட்ட இன்னொரு 36 பேரின் சடலங்கள் அடங்கிய புதைகுழி ஒன்று அங்கும்புர என்ற இடத்திலும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் சத்துருகொண்டான்இ மயிலியன்தனைஇ கிழக்கு பல்கலைக்கழகம் என்பனவற்றில் நடத்தப்பட்ட அரச படைகளின் கொலைகளில் குழந்தைகள், மாணவர்கள்இ வயோதிபர்கள், பெண்கள் உட்பட பல நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். வடக்கில் நெடுங்கேணி பிரதேசத்தில் ஒதியமலை என்ற கிராமத்திலும் பல பொதுமக்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டனர்.

அதேநேரத்தில்இ அரசுக்கெதிராகப் போராட்டம் நடத்துவதாகக் கூறிக்கொண்டு ஜே.வி.பியும்இ புலிகளும் கூட பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளனர்.

ஆனால் இலங்கையில் நடைபெற்ற இந்தப் படுகொலைகள் பற்றி ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசும் உரிய விசாரணைகள் நடத்தி இவற்றைப் புரிந்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து இன்றுவரை தண்டிக்கவும் இல்லை.

இறுதி யுத்த நேரத்தில் முள்ளிவாய்க்காலில் அரச படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றி திரும்பத் திரும்பப் பேசி வரும் ‘ சர்வதேச சமூகம்’ கூட இந்தப் படுகொலைகள் குறித்து மௌனமாகவே இருந்து வருகின்றது.
ரணில் விக்ரமசிங்கவை பொறுத்தவரையில் அவரின் இராஜதந்திர ;அரசியல் வரலாற்றில் அவர் பற்றிய தெளிவு மிக அத்தியாவசியமானதொன்று.

ரணில் விக்கிரமசிங்க 24 மார்ச் 1949 பிறந்தார். இவர் இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் நவம்பர் 12 1994 முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவி வகித்துவருகின்றார். 1977 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் மூன்று தடவைகள் பிரதமராகப் பதவி வகித்தார்.

காமினி திசாநாயக்கா 1994 அரசுத்தலைவர் தேர்தல் பரப்புரைக் காலத்தில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1993 முதல் 1994 வரையும் பின்னர் 2001 முதல் 2004 வரையும் பிரதமராகப் பதவியில் இருந்தார். 2015 ஜனவரி 8 இல் ரணில் விக்கிரமசிங்க அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கையின் 21-வது பிரதமராக நியமிக்கப்பட்டார்.

விக்கிரமசிங்கவின் அரசியல் கூட்டணியான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 2015 நாடாளுமன்றத் தேர்தலில் 106 இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 113 என்ற அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிடினும் இலங்கை சுதந்திரக் கட்சியின் 35 உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் மூலமும் 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வந்ததை அடுத்தும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அமைத்தார். 2018 அக்டோபர் 26 இல் விக்கிரமசிங்க அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார். இதனை விக்கிரமசிங்க அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறி பதவி விலக மறுத்தார். இதனை அடுத்து அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது. விக்கிரமசிங்கவைப் பதவி விலக்கியது அரசியலமைப்புக்கு முரணானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து 2018 டிசம்பர் 16 இல் விக்கிரமசிங்கவிற்கு மீண்டும் பிரதமர் பதவி வழங்கப்பட்டது. 2019 அரசுத் தலைவர் தேர்தலில் கோத்தாபய ராசபக்ச பெரும் வெற்றி அடைந்ததை அடுத்து விக்கிரமசிங்க 2019 நவம்பர் 20 இல் பிரதமர் பதவியைத் துறந்தார்.

இவரே 2004 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் கருணா பிரபாகரனின் பிரிவுக்கு காரணமாவார். இவரின் நரித்தனம் என்பது ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கு பின்னர் செயற்படத்தொடங்கியது. செத்த பாம்பை போன்று இருக்கும் இவர் உடல் இருக்க உள் அவையவங்களை நொருக்கும் ஒரு விசமியாகவே இவர் செயற்பட்டு வருகின்றார். ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் இந்திய இராணுவத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகளை மோதவிட்டு அவருடைய இராஜதந்திர நகர்வை நகர்த்தினார். அதுபோன்றே இவரின் செயற்பாடுகளும் அமையப்பெற்றுள்ளது. தற்பொழுது மீண்டும் பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவரும் இவர் ஆட்சி கவிழ்ப்பு ஒன்றை ஏற்படுத்தும் அமெரிக்கா இந்தியா பின்புலத்துடனேயே களமிறங்குகின்றார். இருக்கக்கூடிய அரசாங்கத்தை வைத்தே தமிழ் மக்களுக்கான தீர்வுதிட்டத்தை பெற்றுக்கொள்ளாது மீண்டும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நம்பி ஏமாறுகின்ற அல்லது ஏமாற்றப்படுகின்ற சூழ்நிலையையே இவர் ஏற்படுத்துவார். புhலைவன ரீதியாக ஈராக் நாட்டின் சதாமுசைனும் பனங்காட்டு நரியாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இலங்கை நரியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இடம்பிடித்துள்ளார்கள்; என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஆகவே இந்த வரிசையில் ரணில் விக்ரமசிங்கவை நம்பி மீண்டும் ஒரு கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் கறிச்சட்டியில் தவறி அடுப்பில் விழுந்த கதையாக தமிழர்களின் அரசியல் நிலை மாறக்கூடாது. இவர் 5 தடவைகள் பிரதமர் ஆசனத்தை அலங்கரித்தார்.

1. கொழும்பு, கொள்ளுப்பிட்டி, 5 ஆம் ஒழுங்கையில் உள்ள தனது பாரம்பரிய இல்லத்தைக்கூட பெரிய அளவில் மறுசீரமைப்புச் செய்துகொள்ளவில்லை. தனக்கென்று இருக்கும் அந்த ஒரேயொரு வீட்டையும் தனது மரணத்தின் பின்னர் தனது பாடசாலையான ரோயல் கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்து உயில் எழுதிக் கொடுத்து விட்டார்.

2. அவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் யார் யார் என்பதுகூடப் பொது மக்களுக்குப் பெரிதாகத் தெரியாது.. அவர்கள் எவரையுமே அரசாங்கப் பதவிகளில் ஒருபோதுமே இருத்தவில்லை. வாரிசுகளும் இல்லைஇ வாரிசுகளுக்காக பதினான்கு தலைமுறைகளுக்கு நாட்டைக் கொள்ளையடித்துச் சொத்துச் சேர்க்க வேண்டிய தேவையும் அவருக்கு இல்லை.

3. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த களனி விகாரை முழுக்க முழுக்க அவரது தாயாரின் அன்பளிப்புகள் மூலம் நிறுவப்பட்டது. அதன் நிர்வாக சபையில் நீண்ட காலம் பணியாற்றினார்இ பின்னர் அதிலிருந்து விரட்டவும் பட்டார். ஆனால் அந்த விகாரையையோ வேறெந்த விகாரைகளையோ அவர் ஒருபோதும் தனது அரசியலுக்குப் பயன்படுத்தவில்லை.

4. தொலைக்காட்சி மற்றும் கம்பியூட்டர்களை இந்த நாட்டுக்கு அறிமுகம் செய்ததில் அவர்தான் முன்னோடி. அவரது ஒரு சகோதரரே முதன்முதலாக ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்தத் தொலைக்காட்சியையோ அரசாங்கத்தின் தொலைக்காட்சிகளையோ ஒருபோதும் தனது அரசியலுக்குப் பயன்படுத்தியதில்லை. ஒரேயொரு தடவை அவர் நல்லாட்சி அரசாங்கத்தில் பிரபல ஊடகவியலாளர் சன்னஸ்கலவின் அழைப்பின் பேரில் கலந்துகொண்டார். அப்போது சன்னஸ்கல ‘உங்கள் குடும்பம்தான் தொலைக்காட்சியையே நாட்டுக்குத் தந்தது. அரசாங்கத் தொலைக்காட்சிக்குக் கூட நீங்கள் ஏன் இவ்வளவு காலத்தில் ஒரு தடவையேனும் வரவில்லை ?’ எனக் கேட்டபோதுஇ ஒரு புன்னகையோடு ‘என்னை யாரும் அழைக்கவில்லை’ என்றுதான் பதிலளித்தார்.

5. தோல்வி மேல் தோல்விகள் வந்த போதிலும் ஒருபோதும் துவண்டு போகவில்லைஇ மக்களைக் கடிந்துகொள்ளவில்லை.

6. தனது அரசியலுக்காக ஒருபோதும் பெளத்த மதத்தையோஇ சிங்கள இன உணர்வையோஇ தேசப் பற்றையோ விலைகூறி விற்கவில்லைஇ வேஷம் போடவில்லை.

இவ்வாறான குணஇயல்புகள் இவருக்குள் இருந்தாலும் தமிழினத்தின் தீர்வு திட்டம் தொடர்பில் ஒரு அசமந்த போக்கை கொண்டவராகவும் வடகிழக்கிணைந்த தமிழர் தாயகம் தமிழினத்திற்கு வழங்கக்கூடாது என்பதில் உறுதியாக தனது அதிகாரம் இருக்கும் வரை செயற்பட்டவர். இவரது ஐக்கிய தேசியக் கட்சியும் அவ்வாறே கடந்த காலம் செயற்பட்டு வந்தது. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் தமிழினம் கொலை செய்யப்பட்டதை விட ஜே. ஆர். ஜெயவர்தனவினால் இந்த நாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களே அதிகம்.

ஆகவே ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் நீண்ட காலத்திட்டமுடையது. தமிழினத்தின் அரசியலை அடியோடு குழிதோண்டி புதைக்கும் செயற்பாடாகவே இவரின் அரசியல் மீள் வருகை இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

SHARE