முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த லொத்தர் சபை

236

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேசிய அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய அபிருத்தி லொத்தர் சபையின் வடமாகாண லொத்தர் விற்பனையை மேம்படுத்தும் நிமித்தம் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை விற்பனை உதவியாளர்களாக இணைத்து அவர்கள் லொத்தர் விற்பனை செய்வதற்கான சுயதொழில் உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டது

அந்தவகையில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட 20 முன்னாள் போராளிகள் தேசிய லொத்தர் சபையின் விற்பனை உதவியாளர்களாக இன்று இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் மற்றும் விற்பனைக்கூடங்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ். சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது

யாழ். மாவட்டத்தில் 52வது படைப்பிரிவின் தளபதி மேவின் பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் றொமிஸ் ஜெயவர்தன மற்றும் பணிப்பாளர் விக்ரம வீரசிங்க அவர்களினால் இந்த உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில் நந்தனன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தேசிய லொத்தர் சபையின் விற்பனை உதவியாளர்களாக இன்று நியமிக்கப்பட்டவர்களுக்கு நாளொன்றுக்கு 750 ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதுடன் மூன்று மாதங்களின் பின்னர் அவர்களை விற்பனை முகவர்களாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அபிவிருத்தி லொத்தர் சபையின் பணிப்பாளர் விக்ரம வீரசிங்க அங்கு குறிப்பிட்டார்.lotar

SHARE