முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை அவசியம் உடல் பரிசோதனையை மேற்கொள்வதற்காக பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஜனநாயக போராளிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

282

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்று வந்தவர்களின் உடல் பரிசோதனையை மேற்கொள்வதற்காக பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஜனநாயக போராளிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,

“அண்மைக்காலமாக புனர்வாழ்வு பெற்று வந்த போராளிகள் மரணத்தை தழுவி வருகின்றனர்.

இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பலமடைந்து வருகின்றது.

இவற்றை கருத்தில் கொண்டு முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் எந்த பகுதியில் இருக்கும் முன்னாள் போராளிகளும் 0777735081, 0773169997 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு இலவச மருத்துவ பரிசோதனைக்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என அந்த கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1467105501IMG_5407

SHARE