முன்னாள் போராளிகள் இன்னும் இராணுவத்தோடு சேர்ந்து இயங்குகிறார்கள்.
இராணுவத்திற்கு தகவல் சேகரித்து கொடுக்கிறார்கள் அதனால் அவர்கள் வசதியாக வாழ்கிறார்கள். அவர்களோடு மக்கள் ஒன்றிணைய பயம்கொள்கிறார்கள்.”
விக்கி ஐயா உத்தியோக பூர்வமாக தெரிவிப்பு ?
Posted by Inparasa Kanthasami on Isnin, 20 Ogos 2018
தன்ற பிள்ளைகள் ரெண்டையும் சிங்களவருக்கு கலியாணம் கட்டிக்குடுத்து சிங்கள சம்பந்தியா கொழும்பில் வசித்து சிங்களத்திடம் சோரம் போய் பதவி பெற்று புலிகள் அமைப்பு உற்பட போராளி அமைப்பின் உறுப்பினர்களுக்கு கடுமையான தண்டனைகளை நீதிமன்றத்தின் ஊடாக வழங்கிய விக்கி ஐயாதான் தமிழினத்தின் தலைவர் என்றால் நாட்டுக்காக போராடிய முன்னாள் போராளிகள் காட்டிக்கொடுப்பாளர்கள்தான்.
விக்கி ஐயாவின் கூற்றுப்படி இந்த வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் போராளிகளும் ஒருகாலத்தில் காட்டிக்கொடுப்பாளர்களாகவும் இராணுவத்தோடு சேர்ந்து இயங்கியவர்களாகவும் தகவல் சேகரித்து கொடுத்தவர்களாகவும்தான் இருந்திருக்கிறார்கள் ஏனென்றா அவையும் கடந்த காலத்தில் புனர்வாழ்வு முகாம் சிறைச்சாலை என்று இருந்துவந்தவர்கள்தானே அவர்கள் இப்போது நாட்டில் இருந்தால் அவர்களையும் இராணுவத்தோடு சேர்ந்து இயங்குபவர்கள் என்றுதானே விக்கி ஐயா சொல்லி இருப்பார்?
விக்கி ஐயாவை கொண்டுவந்தது சம்பந்தன் தானே சுமந்திரன் தானே என்று பேசிக்கொண்டு வரவேண்டாம் அவரின் சுயரூபம் தெரிந்து அவரை அகற்ற வெளிக்கிட கஜேந்திரகுமார், கஜேந்திரன் போன்ற தமிழ்தேசியவாதிகள்தான் எங்கள் தலைவர் விக்கி அகற்றாதே அகற்றாதே பதவியில் இருந்து அகற்றாதே! என்று பதாகை ஏந்தி போராடி அவரை காப்பாற்றினார்கள்.
இன்று பல ஆயிரம் முன்னாள் போராளிகளை துரோகிகள் ஆக்கிய விக்கி ஐயாவுக்கு எதிராக கஜேந்திரகுமாரோ கஜேந்திரனோ கருத்துச்சொல்ல மாட்டார்கள் ஏனெனில் உள்ளூரில் இருக்கும் போராளிகள் பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை அவர்கள் வெளிநாடு போனால் மட்டும்தான் தேடிப்போய் தேசியப்போராளிகள் நீங்கள் என்று காசை வாங்கிக்கொண்டு வருவார்கள் விக்கி ஐயாவைப்போன்றே….