ஆந்திர மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒய் எஸ் ஆரின் வாழ்க்கையை யாத்ரா என்ற பெயரில் திரைப்படமாக படமாக உருவாகவுள்ளது.
இப்படத்தை இயக்குனர் மகி. வி ராகவ் இயக்கத்தில் உருவாகவுள்ளது, ஒய் எஸ் ஆர் அவர்களின் வேடத்துக்கு மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி நடிக்கவுள்ளார், அவரது மகன் ஒய் எஸ் ஜெகன் கதாபாத்திரத்துக்கு நடிகர் சூர்யாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம்.
இதுபற்றி இயக்குனர் மகி. வி ராகவ் கூறுகையில், யாத்ரா படத்தில் ஒய் எஸ் ஆரின் மகன் வேடத்துக்கு சூர்யா பொருத்தமாக இருப்பார் என்று எண்ணுகிறோம். விரைவில் அவரை அணுகி பேசவுள்ளோம். அதுவரை எதுவுமே உறுதியில்லை என கூறியுள்ளார்.