முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மலவாசலில் தொங்கிக்கொண்டிருந்த சீல் பிடித்த கான்சர் கட்டி!!! இன்றைய ஊடக அறிவிப்பில் வன்னி எம்.பி வைத்திய கலாநிதி சி.சிவமோகன் காட்டம்.
இன்று வன்னி பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடாக அறிவிப்பில் நேற்றைய புதிய கட்சி தொடங்குவது பற்றி முன்னாள் முதலமைச்சரின் அறிவித்தல் சம்மந்தமாக சி.சிவமோகன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்
எண்பது வயதினிலும் பதவி ஆசையால் தேசியத்தலைவர் பிரபாகரன் கொண்டுவந்த தமிழர் அரசியல் இருப்பான தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருக்குலைக்க சிங்களத்தால் சூசகமாக களம் இறக்கப்பட்ட தமிழின துரோகியாக 24.10.2018 அவரை அடையாளம் காட்டிய நிக்கின்றது. தமிழர் வரலாற்றில் கறைபடிந்த ஒரு நாள் 24.10.2018 என்பதை வரலாறு தமிழருக்கு குறித்து சொல்லும் என்பதை மக்களுக்கு விட்டு வைக்கின்றேன்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பொறுத்த வரை சிங்களத்தின் நீதியரசர் மலவாசலில் தொங்கிக்கொண்டிருந்த சீல் பிடித்த கான்சர் கட்டி
சத்திர சிகிச்சை செய்யவேண்டிய காலத்தில் அதை செய்திருந்தால் என்றோ தமிழ் தேசிய கூட்டமைப்பு தூய்மை பெற்றிருக்கும்.
இருந்தாலும் இன்று சீல் பிடித்த கான்சர் கட்டி நான் தான் என்று மேடை போட்டு தனது வாயினாலேயே தமிழ் மறவர்களுக்கு சொல்ல வைத்த கடவுளுக்கு நன்றிகள்.
பொறுமையின் விழிம்பில் துரோகத்தின் எல்லையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய விருட்ஷம் எடுக்கும் என்பதற்க்கான நிகழ்வு நேற்று நடந்த நிகழ்வு.
அவர் மேலும் கூறுகையில்
நேற்றைய தின நிகழ்வின் சில குறிப்புக்கள் மீதான எனது பார்வை ஊடகத்துறைக்காக
எதிர்பார்ப்பு கூடினால் ஏமாற்றமும் அங்கு இருக்கும்
சாரை சாரையாக மக்கள் கூடுவார்கள் என்று நம்பவைத்தனர் ஒருங்கமைப்பாளர்கள் ஏமாற்றம் தான் என்று முதலமைச்சர் அவரே அவல் வாயினால் சொன்னார்.
தமிழ் மக்கள் பேரவை அரசியலுக்குள் புகுந்துவிட்டது என்பதை உறுதி செய்து தன்னை தானே பொய்யனாக்கி கொண்டார் சிங்களத்தின் முன்னாள் நீதியரசர்.
99 வருட கால அரசியலை பற்றி பேசிய அவருக்கு அந்த 99 வருட காலா தமிழர் இருப்பு அரசியல் ஆயுத போராட்டத்தில் உங்களினுடைய பங்கு எங்கை ஐயா இருந்தது ???? இது எனது கேள்வியாகும் என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் முன்னால் முதலமைச்சர் பற்றி கூறுகையில்
நீங்கள் சிங்களத்தில் தொங்கி ,சிங்களத்தில் நீதியரசராகி,சிங்களத்திற்கு சொந்த பரம்பரையையே தாரை வார்த்து கொடுத்து, சிங்கள தேசத்தில் தான் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்வேன் என்று சொல்லி மகிந்த ராஜா பக்சமுன்னாள் பதவி பிரமாணத்தை தங்களது சிங்கள உயர் அடி வருடிகளுடன் செவ்வனே நிறைவேற்றி முடித்த நீங்களா எமது தமிழ் மக்களது விடுதலையை முன்னெடுத்து செல்லப்போகின்றிர்கள் ??
இவ்வாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் ஊடக அறிவிப்பில் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.