முன்னைய ஆட்சிக்கால மோசடிகள் – தவிர்த்தார் மைத்திரி

234

முன்னைய ஆட்சிக்காலத்தில் முக்கிய பிரமுகர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள், முறைகேடுகள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளின், முன்னேற்றம் குறித்து, விளக்கமளிக்குமாறு, சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம், நிராகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் இணைந்து இந்த அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்திருந்தனர்.

எனினும், இந்த விவகாரம் குறித்துக் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை பொருத்தமான இடம் அல்ல என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அதனை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

எனினும், இந்த விவகாரம் தொடர்பாக,வேறொரு இடத்தில் கலந்துரையாடுவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக, அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டார்.

அதேவேளை, இதுசம்பந்தமான அமைச்சரவைப் பத்திரம், நிராகரிக்கப்படவில்லை என்று, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

cabinet-1

SHARE