முன்னைய ஆட்சியில் 5 பேரும் எடுக்கும் தீர்மானமே அமைச்சரவைக்கு.. – ஜனாதிபதி

283

625.117.560.350.160.300.053.800.210.160.70 (3)

ஊழல், மோசடிகள் நிறைந்த காட்டுத்தர்பார் நடத்தும் ஒரு அரசை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்கான ஒரு சூழலை இல்லாமல் செய்வதே எனது முதல் இலக்கு.

அதன் முதற்படியாகவே 19 வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.அதன் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன பொலிஸ், அரச சேவை ஆணைக்குழுக்களை நேற்று சந்தித்து அவர்களது பிரச்சினைகள், தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் அவற்றை மேலும் பலப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றியும் கலந்துரையாடினேன்.

எமது நல்லாட்சியின் மீது விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் முன்வைப்போர் நாங்களும் அதேபாதையில் பயணிப்பதாக விமர்சனம் செய்கின்றனர்.

கரடு முரடான பாதையை மீண்டும் செப்பனிட வேண்டுமாயின் கரடு முரடான பாதையில் சென்றுதான் செப்பனிட வேண்டும்.

என்ன நோக்கத்திற்காக இந்த அரசை உருவாக்கினோம் என்ற உள்நோக்கம், எண்ணம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.எங்களுக்கு எந்த விதமான சவால்கள் வந்தாலும் அதனை முறியடித்து முன்னெடுத்துச் செல்வோம்.

2 வருட பதவிக் காலம் இருக்கும் நிலையில் ஏன் தேர்தலுக்கு செல்கிறீர்கள்? என்ற கேள்விக்கு முன்னைய அரச தலைவர் இன்னமும் சரியான பதில் அளிக்கவில்லை.

எந்த ஊடகமும் இந்த கேள்வியை அவரிடம் கேட்கவும் இல்லை.

வெற்றிக்கான மன நிலையை உருவாக்கிய பின்னரே தேர்தலுக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு அவர் செய்யவில்லை.

பொருளாதார நெருக்கடி, மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமை கவுன்ஸிலுக்கு முகம் கொடுக்க முடியாத நிலை போன்ற காரணத்தினால்தான் முன்னைய தலைவர் தேர்தலுக்குச் சென்றுள்ளார்.

இதனை வெளிப்படையாக அவர் வெளியிடவும் இல்லை.

அமைச்சரவைக்கு கீழ்படியாத ஆட்சி, முரண்டு பிடிக்கும் தன்மை என்பவற்றுடன், குடும்பத்திலுள்ள 5 பேரும் எடுக்கும் தீர்மானமே அமைச்சரவைக்கு கொண்டுவரப்பட்டது.

இதுபோன்ற காட்டுத்தர்பார் ஆட்சியையே அவர்கள் நடத்தி வந்தனர்.ஊழல் நிறைந்த நிர்வாகம், தான்தோன்றித்தனமான போக்கு இவ்வாறான துரோகத்தனத்துக்கு துணைணபோக முடியாது என்பதாலேயே அதிலிருந்து வெளியேறி நல்லாட்சியை அமைத்தோம்.

திரும்பவும் அதேபோன்றதொரு ஆட்சியை கொண்டுவருவதா அல்லது மக்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளித்து செயற்படுவதா என்பது பற்றி சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

ஊடகவியலாளர் ஒருவர் தொடுத்த கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

SHARE