
நேற்று இடம்பெற்ற நிதியமைச்சின் புதிய அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னைய அரச தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது தனி விமானங்களில் பயணங்களை மேற்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் செல்லும் நாடுகளில் குறித்த விமானங்கள் பல நாட்கள் வரை நிறுத்தப்பட்டிருக்கும். இதன் காரணமாக விமானசேவைக்கு பாரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டிருந்தது.
ஆனால் எனது வெளிநாட்டுப் பயணங்களுக்கு நான் ஒருபோதும் தனி விமானங்களைப் பயன்படுத்தியது கிடையாது.
அத்துடன் பயணிகள் விமானத்தில் பயணம் செய்யும்போதும் குறிப்பிட்ட சிலர் தவிர பெருமளவானோரை அழைத்துச் செல்வதும் இல்லை.
கடந்த, காலங்களுடன் ஒப்பிடுகையில் ஜனாதிபதி செயலகத்தின் செலவுகள் 60 வீதம் குறைந்துள்ளது. பொதுமக்களின் பணத்தை வீணாக்கும் செயற்பாடுகள் எனது பதவிக் காலத்துக்குள் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
அத்துடன், அரச அதிகாரிகள் மட்டுமன்றி அரசியல்வாதிகளும் நிதிக்கையாளுகை தொடர்பான அரச விதிகள் தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்துவது சிறந்தது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.