
முப்படையினரின் சம்பளங்கள் பத்தாயிரம் ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையின் முப்படையினரதும் சம்பளங்கள் பத்தாயிரம் ரூபாவினால் விரைவில் அதிகரிக்கப்பட உள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கியிருந்த போதும் இந்த சம்பள உயர்வில் படையினர் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.