முருகதாஸை டார்ச்சர் செய்யும் விக்ரம்

382

தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த நடிகர் என்றால் விக்ரம் தான். ஆனால், இவர் ஒரு இயக்குனரை தொந்தரவு செய்கிறார் என்றால் நம்பவா முடிகிறதா? ஆனால், அது தாங்க உண்மை.

முருகதாஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஆரம்பித்த போது தான் சுமூகமாக தான் சென்றது.

ஆனால், ஒரு சில வருடங்களுக்கு முன் விக்ரம்-முருகதாஸ் ஒரு படத்தில் இணைவதாக இருந்து கைவிடப்பட்டது, அதை மனதில் வைத்து கொண்டு தான் விக்ரம் இந்த படத்தில் வீண் செலவு செய்து, பட்ஜெட்டை அதிகப்படுத்தி கொண்டே போகிறார் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இதனால், மிகவும் சோகத்தில் இருக்கிறாராம் முருகதாஸ்.

SHARE