முருகன் ஆலய முன்றலில் உண்ணாவிரத போராட்டம்!

251

ஊவா பரணகமை பிளேலெமன்ட் தோட்ட மக்கள் ரத்னோதாகம முருகன் ஆலய முன்றலில் உண்ணாவிரத போராட்டதில் ஈடுபட்டுள்ளதோடு பணி பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஊவா பரணகமை ரத்னோதாகம முருகன் ஆலயத்தின் அரண் ஒன்றை அமைப்பதற்கு முற்பட்ட போது பெரும்பான்மையின பிரதேசவாசிகளுக்கும் கோயில் நிர்வாகத்தினருக்குமிடையே அமைதியின்மை ஏற்பட்டது.

குறித்த அரண் அமைக்கப்படுவதால் பிரதேசவாசிகளின் வீதியொன்றுக்கு இடையூறு ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்த போதும், கோயில் நிர்வாகத்தினர் இதனை மறுக்கவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

பிரதேச செயலாளர், பொலிஸார் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

தமது வேண்டுகோளுக்கு அதிகாரிகள் செவி சாய்த்து, தமக்கு நியாயமான தீர்வொன்றினை பெற்றுத்தரும் வரை தாம் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடப்போவதில்லை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

SHARE