மத்திய வங்கி முறி மோசடியை மூடி மறைப்பதற்கான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த சூழ்ச்சிகாக ஊடகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனொரு செயற்பாடாக ஜே.ஸ்ரீ.ரங்காவை, அர்ஜுன மகேந்திரன் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்தப்பு கடந்த 8ம் 9ம் திகதிகளில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. திருகோணமலையில் உள்ள அதி சொகுசு ஹோட்டல் ஒன்றில் இருவரும் சந்தித்துள்ளனர்.
இருவரும் ஹோட்டலில் தங்கியிருந்த வேளையில், அவர்களை சந்திப்பதற்கு பல்வேறு நபர்கள் வந்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் அர்ஜுன் மகேந்திரனின் மருமகனான அர்ஜுன் எலோசியஸ் மற்றும் சிங்கள தொலைக்காட்சி நிறுவனத்தின் பிரதானியும் அங்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.