சோமாலியாவில் உள்ள ஆப்பிரிக்க ஒன்றிய படையில் பணியாற்றி வரும் 17 உகாண்டா வீரர்கள் மொகதிஷுவில் உள்ள ராணுவ நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
அவர்கள் ராணுவ இயந்திரங்கள் மற்றும் எரிபொருளை சோமாலிய நகரத்தில் விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
17 நபர்களில் ஒரு படை வீரர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு படையினர் பணியில் அமர்த்தப்பட்ட பின், ஆப்பிரிக்க ஒன்றிய அலுவலகத்தோடு தொடர்புடைய ராணுவ நீதிமன்றம் சோமாலியாவில் ஓர் அமர்வை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
22,000 படையினரை அளித்துள்ள முக்கிய பங்களிப்பாளராக உகாண்டா உள்ளது.