சவுதி அரேபியாவில் தேற்காசிய நாடுகளின் பெண்கள் படும் பாடு – ஷேக்குகளுக்கு வீட்டுவேலை, உடலின்பம் எல்லாம் செய்தாலும் தண்டனை மரணம் தான்!

இஸ்லாமில் பெண்களின் உரிமைகள் பற்றி பேசுவதும், நடப்பதும்: பெண்களின் உரிமைகள் பற்றி முஸ்லிம்கள் பிரமாதமாகப் பேசுவார்கள். ஆஹா பாருங்கள் இஸ்லாதில் போல உரிமைகள் மற்ற வேறு எந்த மதத்திலும் இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். ஆனால், தொடர்ந்து பெண்கள் ஏன் சவுதி அரேபியாவில் பாலியில் வன்மங்களுக்கு பெண்கள் ஈடுபடுத்தப் படவேண்டும், மாறாக அவர்கள் செக்ஸ் கொடுமையை தாங்கமுடியாமல், ஒருவேளை கொதித்து எழுந்தால், அவர்களை அடித்து, நொறுக்கி வழக்குகள் போட்டு, சரீயத் சட்டம் மூலம் மரணதண்டனைக் கொடுத்து ஏன் கொல்லப் படவேண்டும் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டார்கள் அல்லது அவ்வாறெல்லாம் இப்பொழுது நடக்கிறதா என்பது போல மௌனமாக இருக்கிறார்கள். இந்நிலையில் வழக்கம் போல இப்படியொரு செய்தி வந்துள்ளது. வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரைக்கும், இந்த பெண்களை வேலைக்கு வரவழைப்பது என்பது, நவீனகால அடிமைத்தனம், அடிமை வியாபாரம் என்றுதான் மெய்பிக்கப்படுகிறது[1].
இரு வாரங்களில் ரூ.10 கோடி தராவிட்டால் பணிப்பெண்ணின் தலைதுண்டிப்பு: இந்தோனேஷிய பணிப்பெண்ணின் மரணதண்டனையை நிறுத்துவதற்கு, சவுதி அரேபியஅரசு, 10 கோடி ரூபாய் கேட்டுள்ளது[2]. சவுதி அரேபியாவில், நுராஅல்-கரீப் என்ற முதலாளியிடம், இந்தோனேசியாவைச் சேர்ந்த, சேத்தினா ஹ்பின்தி ஜூமாதி, 41, வேலை செய்து வந்தார்.முதலாளி, பாலியல் தொந்தரவு செய்ததாகவும், கொலை செய்ய முயற்சித்ததாகவும் ஜூமாதி வாக்குமூலம் அளித்துள்ளார். முதலாளியை கொலை செய்துவிட்டு, ஆறு லட்சம் ரூபாயைத் திருடி, தப்பிச்சென்றது தொடர்பாக, கடந்த 2007ம்ஆண்டு, ஜூமாதிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அடுத்தமாதம், 14ம்தேதி, மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில், இந்தோனேஷிய அரசு, இறந்த அல்-கரீப்பின் குடும்பத்திற்கு, நஷ்டஈடாக, 11 கோடி ரூபாய் அளித்து (ரத்தப்பணம்), மரணதண்டனையை நிறுத்த, மத்தியஸ்தம் செய்தது. இதை ஏற்ற, சவுதிநீதி மன்றம், “இருவாரங்களுக்குள், இந்தத்தொகையை கொடுத்தால், பெண்ணின் மரணதண்டனை நிறுத்தப்படும்[3]; இல்லை எனில், மரணதண்டனை நிறைவேற்றப்படும்’ என, கூறியுள்ளது[4]. ஆனால், 11 கோடிரூபாய் இல்லாததால், ஜூமாதியின் குடும்பத்தினர், நிதிதிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்[5]. அவர்களுக்கு ஆதரவாக, பொதுமக்கள் நிதியுதவி அளிக்கத் துவங்கியுள்ளனர்[6]. இந்தோனேசியாவும் ஒரு இஸ்லாமியநாடு தான், இருப்பினும் இவ்விசயத்தில் அப்பெண்ணைக் காப்பாற்றுவதற்கு முயன்று வருகிறது. ஊடகங்களிலும் தண்டனைக்கு எதிராக கருத்துருவாக்கம் ஏற்படுகிறது[7].
தெற்காசிய நாடுகளினின்று ஏற்றுமதி செய்யப்படும் பெண்கள்: வீட்டுவேலைக்கு என்று பல தெற்காசிய நாடுகளிலிருந்து ஆயிரக்ககணக்கான பெண்கள் வருடந்தோறும் ஏஜென்டுகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, ஷேக்குகள் வீடுகளில் விடப் படுகிறார்கள். அதற்குப் பிறகு, பெரும்பாலான பெண்களின் கதி என்ன என்று தெரிவதில்லை. ஷேக்குகள் அப்பெண்களை தங்களது காமத்திற்கு உபயோகப்படுத்திக் கொண்டு, வீட்டுவேலைகளைக்கும் உட்படுத்திக் கசக்கிப்பிழிந்து விடுகின்றனர். சரியாக வேலை செய்யாவிட்டால், மறுத்தால் அடித்து உதைக்கப்படுகிறார்கள். அத்தகைய சித்திரவதைகளுக்கு அளவேயில்லை.
கொடுமைப் படுத்தப்பட்ட பெண்க்ளின் படங்கள் சிலநேரங்களில் வெளியில் வருவதும் உண்டு[8]. சவுதி அரேபியா இவ்விசயத்தில் மிகவும் குரூரமாகவே செய்து வருகின்றது[9]. பொதுவாக குரூரமாக சித்திரவதை செய்யப்படும் இப்பெண்கள், ஒருநிலையில் தடுக்கப் பார்க்கிறார்கள், எதிர்க்க முயல்கிறார்கள். அந்நிலையில் பொய்வழக்குப் போட்டு தண்டனைக்குட்படுத்தப் படுகிறர்கள். பல நேரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களே பழிவாங்க தாங்களே சந்தர்ப்பம் பார்த்து எஜமானர்களைத் தாக்குவது, ஏன்கொலை செய்வதும்உண்டு. ஆனால், இஸ்லாமிய சட்டத்தில் பெண்களுக்கு எதிராகத்தான் சரத்துகள் இருப்பதால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்று குரூரமாக அடிபட்டு சாகவேண்டும் அல்லது இவ்வாறு மரணதண்டனைக்குட்பட வேண்டும். இதுதான் கதி[10]. ஜனவரி 2013ல் ஒரு இலங்கைப்பெண் கொல்லப்பட்டபோதும் இத்தகைய விவரங்கள் வெளிவந்தன[11]. அப்பொழுது 45 பெண்கள் தண்டனைக்காகக் காத்துக் கிடக்கின்றனர் என்று செய்தி வெளியாகின[12]. குவைத்திலிருந்து ஒரு பெண் எழுதிய கடிதத்திலும் அத்தகைய விவரங்கள் வெளியாகின[13].
ஷரீயத் என்கின்ற இஸ்லாம் சட்டப்படி கடுமையான, குரூரமான தண்டனைகள் கொடுக்கப் படல்: சவுதி அரேபியாவில் கொலைகுற்றத்துக்காக 2 பேருக்கு தலைதுண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது [14]. இந்தாண்டில் இதுவரை 7 பேரின் தலை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது. இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பலாத்காரம், கொலை, மதத்தை அவமதித்தல், ஆயுதங்களுடன் கொள்ளையடித்தல், போதைமருந்து கடத்துதல் ஆகிய குற்றங்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படுகிறது. தலையை துண்டித்து மரணதண்டனையை நிறைவேற்றுகின்றனர். தெயிப் நகரில் பழங்குடியினத்தை சேர்ந்த அப்துல்லா என்பவர், அதே இனத்தை சேர்ந்த ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதுபோல தென்மேற்கு அசிர் பகுதியில் நாசர் அல் கதானி என்பவர் அயத் இல்கதானி என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. பிறகு இருவரின் தலையைத் துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு தொடங்கி 35 நாட்களே ஆகியுள்ள நிலையில், இதுவரை 7 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு தலை துண்டிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78. இதில் வெளிநாட்டினரும் அடக்கம். 2012ல் 79 பேருக்கும், 2011ல் 82 பேருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது[15]. சவூதியில் 5 வயது மகளை கொடுமைப்படுத்தி, கற்பழித்துக் கொன்ற இஸ்லாமிய போதகருக்கு 8 ஆண்டு சிறை, 800 சவுக்கடி – சாட்சி சொன்ன மனைவிக்கும் தண்டனை! என்ற செய்திகள் எல்லாம் சகஜமாக வந்துள்ளன[16].
முலைப்பால் ஊட்டுங்கள், ஆனால் காரை ஓட்ட பெண்களுக்கு அனுமதியில்லை!: சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பற்பல கட்டுப்பாடுகள் உள்ளன. எல்லோரும் உடலை மறைப்புத்துணியால் மூடிக்கொண்டு இருக்க வேண்டும். வெளியேபோனால், ஒரு ஆணுடன்தான் போகவேண்டும். வேலைக்குப் போகக் கூடாது…………….இப்படி ஏராளமான விதிகள். இந்நிலையில் பெண்கள் காரோட்ட வேண்டி கேட்டுள்ளார்கள். ஆனால், அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. செய்க் அப்துல் மோஷின் பின்நாசர் அலி ஒபைகன் என்ற இஸ்லாமிய வல்லுனர் சமீபத்தில் ஒரு பத்வா கொடுத்துள்ளார். இதன்படி, சௌதி பெண்கள் வெளிநாட்டு காரோட்டிகளுக்கு முலைப்பால் கொடுக்கலாம், அவ்வாறு செய்வதால், இஸ்லாமிய முறைப்படி, அவர்கள் மகன்கள் ஆவார், தமது மகள்களுக்கு சகோதரர்கள் ஆவர். இதன்படி, புதியவர்கள் கூட இந்த பத்வா மூலம், குடும்ப பெண்களுடன் கலந்து இருக்கலாம். இதனால், முலைப்பால் உண்ட அந்த அந்நிய ஆண்மகன் பெண்களிடம் செக்ஸ் ரீதியிலாக தொந்தரவு கொடுக்கமாட்டான். இஸ்லாம் இதை அனுமதிக்கிறது.
“ஒன்று எங்களை காரோட்ட அனுமதியுங்கள் அல்லது எங்களது காரோட்டிகளுக்கு முலைப்பால் ஊட்ட அனுமதியுங்கள்”: சவுதியில் என்ன பிரச்சினை என்னவென்றால், கடைக்குச் சென்றுவிட்டு வரும் பெண்கள் திரும்ப வீட்டுக்கு போக, காரோட்டி வருவதற்காகக் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. அதனால், தாங்களே காரோட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்கிறார்கள். இதையே, சவுதி பெண்கள் தமக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.சவுதி குடும்பத்திற்கு ஒரு காரோட்டித் தேவைப்படுகிறது. அதற்கு பெண்களே காரோட்ட அனுமதிக்கப் படவேண்டும் என்று அந்நாட்டுப் பெண்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், அப்பெண்கள் கூறுவதாவது, “ஒன்று எங்களை காரோட்ட அனுமதியுங்கள் அல்லதுஎங்களதுகாரோட்டிகளுக்கு முலைப்பால் ஊட்ட அனுமதியுங்கள்” என்று அதிரடியாகக் கேட்டுள்ளார்கள்[17]! வளைகுடாநாடுகளில் பெண்கள் வேலைக்குப் போவதும் அதிகரித்துள்ளது. சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு, இப்பொழுது அல் வலீது பின் தலால் (Saudi billionaire Prince Alwaleed bin Talal) என்கின்ற பில்லியனர் இளவரசர் பெண்கள் காரோட்டுவது பற்றி தனது இணக்கமாகக் கருத்தை வெளியிட்டுள்ளாராம்.