முல்லைதீவு நீதவான் நீதிமன்ற வழக்கிற்காக அழைத்துச் செல்லப்பட்ட 4 கைதிகள் தப்பி ஓட்டம்

120

முல்லைதீவு நீதவான் நீதிமன்ற வழக்கிற்காக அழைத்துச் செல்லப்பட்ட 4 கைதிகள் நேற்று மாலை தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு கொலைகள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நான்கு கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக முல்லைத்தீவு பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

தப்பிச் சென்ற கைதிகளைத் தேடி சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விஷேடநடவடிக்கை ஒன்றை நேற்று ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா சிறைச்சாலையில் இருந்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE