முல்லைத்தீவிலும் வழி அனுமதிப்பத்திரம்

223
முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கான ஒன்று கூடலும் தர்க்காலிக வழி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வும்  31-10-2016 திங்கள் இரவு 8.00 மணியளவில் முல்லைத்தீவு வலைய கல்விப்பணிமனை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது மாலை 2.30 க்கு ஏற்பாடு செய்திருந்த போதும்  மாதத்தின் இறுதி நாள் என்பதால் நாளை முதல் வழி அனுமதிப்பத்திரங்கள் முடிவடைவதால் கண்டிப்பாக இன்று நள்ளிரவிற்குள் அனைத்து வழி அனுமதிப்பத்திரங்களையும் வழங்கி பேரூந்து சேவையை தடையின்றி மக்களுக்கு வழங்கும் நோக்கோடு கிளிநொச்சி மாவட்டத்தில் 90 தற்காலிக வழி அனுமதிப்பத்திரங்கள்  காலை 10.30 மணிக்கு வழங்க ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைய மாலை 6.30 ஆகியதால் தொடர்ந்து முல்லைத்தீவு பேரூந்து உரிமையாளர்களுக்கும் வழி அனுமதிப்பத்திரம் வழங்கவேண்டும் என்ற நோக்கோடு இது மிகவும் காலதாமதமாக ஆரம்பமானது, அதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 71 பேரூந்துகளுக்கான தற்காலிக வழி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது, குறித்த நிகழ்வானது அதிகாலை 2.30 மணிவரை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் தனது கருத்தை தெரிவிக்கையில் மக்களதும், பேரூந்து உரிமையாளர்களதும் நலனைக் கருத்திற்கொண்டு குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றதாகவும், நான் மக்களுக்கு சரியான சேவையை வழங்க எண்ணிய வேளையிலே என்னோடு இணைந்து அதிகாலை வரை தமது கடமைகளை மேற்கொண்ட எனது அமைச்சின் செயலாளர், அலுவலர்கள், அதிகார சபையின் தலைவர், அலுவலர்கள் ஆகியோருக்கு தனது நன்றிகளை தெரிவித்ததோடு தொடர்ந்து எதிர்வரும் ஆண்டு நிரந்தர வழி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட அவனை செய்யப்படும் என்வும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் அ.நீக்கிலாஸ்பிள்ளை, போலிஸ் உத்தியோகத்தர்கள், வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
unnamed
unnamed-1
unnamed-3
unnamed-4
SHARE