முல்லைத்தீவில் இளைஞர் சக்தி என்ற தொனிப்பொருளில் நடைபவனி

179

முல்லைத்தீவில் இன்று காலை வளமான எதிர்காலத்திற்கான இளைஞர் சக்தி என்ற தொனிப்பொருளில் இளைஞர்கள் நடைபவனி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நிகழ்வில் வடமாகாண இளைஞர் விவகார உதவிப் பணிப்பாளர் மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச செயளாலர், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் வட மாகாண பணிப்பாளர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி, இளைஞர் யுவதிகள் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய கரைதுரைப்பற்று பிரதேச செயளாலர்,

வட மாகாணத்தில் ஆங்காங்கே இடம் பெற்றுக்கொண்டிருக்கின்ற வால்வெட்டுக்களும் தகாத முறையிலான பிரச்சனைகளும் ஜீரணிக முடியதாக இருக்கின்றது.

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் அல்ல அவர்கள் இன்றைய தலைவர்கள்.

நாட்டை ஆரோக்கியமாக கட்டியெழுப்ப வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இன்றைய இளைஞர் யுவதிகளிடமே உள்ளது.

ஆகவே ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்புகின்ற நீங்கள், சமூக பொறுப்புடையவர்களாக உறுதி எடுத்துக் கொள்ள வேண்டிய நாள் இன்றாகும் என குறிப்பிட்டார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் இயங்கும் இளைஞர் கழகங்கள் தமக்கு நிதி சேகரிப்பதற்காக நடைமுறைப்படுத்தும் இளைஞர் கொடி வாரம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் முதலாவது கொடியினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்களுக்கு அணிவித்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்த கொடி வாரமானது எதிர்வரும் 30ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும், இந்நிகழ்வுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE