முல்லைத்தீவில் உழவர் பெருவிழா. கவிஞர் வைரமுத்துவும் கலந்துகொண்டார்.

380

முல்லைத்தீவில் உழவர் பெருவிழா. கவிஞர் வைரமுத்துவும் கலந்துகொண்டார்.

 

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் 2016ம் ஆண்டுக்கான உழவர் விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கவிப்பேரரசு வைரமுத்து இவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், மாகாண அமைச்சுகளின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழாவில் வடமாகாண விவசாய போட்டிகளில் வெற்றியீட்டிய பண்ணையாளர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் 23.01.2016 அன்று இந்த விழா நடைபெற்றது.

இது எனக்கு பிடித்த ஈழத்துக் கவிஞனின் சில கேள்விகள்……………….. வடமாகாண விவசாய அமைச்சிடம் சிறியவனின் சில கேள்விகள்
01-இந்த நிகழ்வுக்கு கவிஞரை தொலைதூரத்திலிருந்து வரவழைத்ததன் நோக்கம் என்ன..?
02-வடமாகாண விவசாயப் பெருமக்கள் பலர் ஏன் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை..?
03-எமது கலாசார பண்பாட்டு பவனிகள் ஏன் ஒழுங்குபடுத்தவில்லை..?
04-ஒரு விவசாயிக்கு கூட கருத்தைக்கூற மேடையில் வாய்ப்பளிக்காதது ஏன்..?
05-முதலமைச்சர், விவசாய அமைச்சர், கவிஞர் வைரமுத்து ஆகியோரின் உரையும் , யாழ் நடன கல்லூரி மாணவிகளின் இரு தொகுதி நடனங்களுடன் பரிசளிப்பும் தான் உழவர் திருவிழாவா..?
06-வைரமுத்து அவர்களின் வருகையை வடபுலக் கவிஞர் ,கலைஞர்களுக்கு பகிரங்கமாக தெரியப்படுத்தாதது ஏன்..?
07-கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தெரிந்த உங்களுக்கு ஈழத்துக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கவேண்டும் என்பது மறந்தது ஏன்..?
08-உணர்வு பூர்வமாக உரைப்பவர்களுக்கு விடுதலை உணர்வுக்காய் தியாகித்தவர்களை விட எஞ்சியவர்களை கவனிக்க மறப்பது ஏன்..?
09-முள்ளிவாய்க்கால் அவலங்களை வைரமுத்து அவர்கள் எழுதப்போவதாக கூறினார் . வரவேற்கிறாம் ஆனால் எங்களின் பிரதிநிதிகள் யுத்தகால மற்றும் முள்ளிவாய்க்கால் நேரம், இறுதி யுத்தத்திற்குப் பிற்ப்பட்ட கால ஆவணங்களையெல்லாம் சேகரித்து வைத்துள்ளீர்களா..?
10-எங்களின் பிரதிநிதிகளில் பலர் மக்களோடு பாதுகாப்பு தடைகளின்றி சாதாரணமாக உரையாட , குறைநிறைகளை விசாரிக்கத் தயங்குவது ஏன்..?
இப்படி பல கேள்விகள் மக்களின் மனங்களில் இருக்கின்றது.
இனிய உறவுகளே நீங்கள் இது தொடர்பாக உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்.

10649931_1002524836476188_1593586645192029997_n 12507319_1002524566476215_2976826997833862653_n 12507356_1002523936476278_1406045255526399241_n 12507380_1002526316476040_533420318341403666_n 12508821_1002524236476248_8504723000464446876_n 12509087_1002524303142908_1462771880850284922_n 12523166_1002524443142894_9176058551376411279_n 12524207_1002524139809591_2558630843655518544_n 12540849_1002524686476203_5219861203483154481_n 12552756_1002523899809615_8416630123953845175_n 12553046_1002525026476169_8911364273233340191_n 12572951_1002523709809634_3457627163501612077_n 12573015_1002524083142930_5042626060340593456_n

 

 

SHARE