முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 6,246 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வாழந்து வருவதாக மாவட்டச் செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தில் உயிரிழந்தும், காணாமல் ஆக்கப்பட்டும் வாழ்க்கை துணையை தொலைத்த பெண்களே இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
அண்மையில் மாவட்டச் செயலகத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தின் அடிப்படையில் 1,246 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் காணப்படுவதாகவும், இதில் 5,252 பெண்கள் விதவைகளாக காணப்படுகின்றனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டத்தின், கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 1914 பெண் தலைமைத்துவ குடும்பங்களும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 1729 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் 1085 பெண் தலைமைத்துவ குடும்பங்களும் காணப்படுகின்றன.
அத்துடன், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 719 பெண் தலைமைத்துவ குடும்பங்களும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 462 பெண் தலைமைத்துவ குடும்பங்களும், வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 337 பெண்தலைமைத்துவ குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.