முல்லைத்தீவில் வெள்ளத்தினால் உடைப்பெடுத்த குளங்கள் புனரமைப்பு

209

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உடைப்பெடுத்த குமுழமுனை – நித்தகைக்குளத்தினை இராணுவத்தினர், நீர்ப்பாசனத் திணைக்களத்தினர், மற்றும் கமநலசேவைகள் திணைக்களத்தினர் இணைந்து புனரமைத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 7ம் திகதி பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து 8ஆம் திகதி குறித்த பகுதியில் ஆறு மற்றும் சிறிய குளங்கள் உடைப்பெடுத்திருந்தன.

இதனையடுத்து மேற்படி குளத்தினை முத்தையன்கட்டு நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் விவசாய அமைப்புக்களுடன் படைத்தளபதி மேஜர் ஜெனரல் துசியந்த ராஜகுருவின் ஒழுங்குபடுத்தலில் 59வது படைப்பிரிவு மற்றும் 593 வது படைப்பிரிவு ஆகிய படைப்பிரிவுகளைச் சேர்ந்த 40 இற்கும் அதிகமான படையினர் சுமார் ஐயாயிரம் வரையான மண் மூடைகளைக் கொண்டு குறித்த குளத்தினை புனரமைத்துள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதியில் உடைப்பெடுத்துக் காணப்பட்ட கோடாரிக்கல் குளத்தினையும் இவ்வாறு படையினர் புனரமைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

SHARE