முல்லைத்தீவு ஏ-35 வீதியில் மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள வட்டுவாகல் பாலம்!

141

முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியின் நீண்டகாலமாக சேதமடைந்து காணப்படும் வட்டுவாகல் பாலத்தினை புனரமைக்குமாறு தொடர்ச்சியாக பல்வேறு தரப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

ஏ-35 வீதியில் மிக நீண்ட காலமாக காணப்படும் பாலத்தின் பாதுகாப்பு தூண்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், பாலத்தின் உட்பகுதி மிக ஆபத்தானதாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலும் ,அதற்கு முன்னரும் சேதமடைந்து போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதி தற்காலிகமாக சீர் செய்யப்பட்டு போக்குவரத்துக்கு விடப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தின் புனரமைப்பு பணிகள் தொடர்பில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தொடர்பு கொண்டு வினவியபோது,

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தை புனரமைப்பு செய்வதற்கான நிதி எவையும் இதுவரை இடைக்கப் பெறவில்லை என்று கூறியுள்ளார்.

இதற்கான நிதியை கோரியிருக்கின்றோம். நிதி கிடைக்கும் பட்சத்தில் அதனைப்புனரமைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பாலம் உள்ளிட்ட இரண்டு பாலங்ளை புனரமைப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடுத்த ஆண்டில் அதற்கான நிதியை கோரியுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

SHARE