முல்லைத்தீவு கடலில் ஆக்கிரமிப்பு இந்திய இழுவைப் படகுகளுக்கு ஆதரவாக செயல்ப்படும் கடற்படையினர்

320

 

முல்லைத்தீவு கடலில் ஆக்கிரமிப்பு இந்திய இழுவைப் படகுகளுக்கு ஆதரவாக

செயல்ப்படும் கடற்படையினர்

 

வவுனியாவில் கொரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர்

விடுதியில் இன்று 07-12-2015 தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும்

வடமாகாண கடற்;தொழிலாளர் இணையம் ஆகியன இணைந்து ஊடகவியலாளர்

சந்திப்பொன்றை நிகழ்த்தியிருந்தன மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பிலேயே

வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொருளாhளர் ஏ.மரியதாஸ் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின்

பொருளாhளர் ஏ.மரியதாஸ் கருத்து வெளியிடுகையில்

முல்லைத்தீவு மாவட்டமானது போரினாலும் இயற்கை அனர்த்தமாகிய

சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட மாவட்டம் அந்தவகையில் முல்லைத்துpவு மாவட்ட மக்கள்

தங்கள் வாழ்வாதாரத்திற்கு கடல்வளங்களையே நம்பியிருக்கிறார்கள். யுத்தத்தின்

பின் 2010 மீளக்குடியமர்ந்த முல்லைத்தீவு மக்கள் இந்திய இழுவைப்படகின்

ஆக்கிரமிப்புக்காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் இது குறித்து ஜனாதிபதி

மைத்திரிபால சிறிசேனா மற்றும் எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் 02-02-2015

தலமையில் கூட்;டம் ஒன்று நடைபெற்று சில முடிவுகளும் எடுக்கப்பட்டிருந்தது இலங்கை

எல்லைப்பரப்புக்குள் வரும் அனைத்து இந்திய இழுவைப்படகுகளையும் கடற்படையினர்

உடனடியாக கைதுசெய்து சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திர்மானம்

எடுக்கப்பட்டது. ஆனால் கடந்த மூன்று தினங்களாக முல்லைத்தீவுகடலில் இந்திய இழுவைப்

படகுகளின் ஆக்கிரமிப்பு அதிகளவில் கூடியிருக்கிறது.

மார்களி தை மாதங்களில் மீன்கள் அதிகமாக காணப்படும் பிரதேசமாக முல்லைத்தீவு

கடற்பிரதேசம் காணப்படுகிறது. யுத்தத்தாலும் இயற்கை அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்ட

முல்லைத்தீவு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிஎடுக்கின்ற இந்த

வேளையிலே முற்கூட்டியே இந்திய றோலர்கள் எமது கடற்பரப்பிலே வளங்களை

சூறையாடுகின்றன. இது தொடர்பாக இந்திய இழுவைப்படகுள் கைது செய்யப்பட வேண்டும்

என தெரிவித்த ஜனாதிபதி கடந்த மூன்று நாட்களாக சட்டரீதியான நடவடிக்கைகள்

எடுக்கப்படவில்லையென தெரிவித்தார். கடற்படையினரும் இணைந்தே இந்திய இழுவைப்

படகுகளுக்கு சார்பாக செயற்படுகிறார்கள் என குற்றஞ்சாட்டினார்.

72 தென்னிலங்கை படகுகளுக்கு அனுமதி வளங்கியிருந்த போதிலும் 300 அதிகமான

தென்னிலங்கை மீனவப்படகுகள் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் திணைக்களகத்தின்

அனுமதி இன்றி அத்துமீறி மின்பிடித்து வருவதாககவும் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மக்கள் சுதந்திரமாக தொழில் செய்கிறார்கள் வாழ்வாதாரம் கட்டி

எழுப்பப்பட்டுள்ளது என அரசு தெரிவித்து வருகிறது ஆனால் எங்களது வாழ்வும்

வளமும் சுறண்டப்படுகிறது என தெரிவித்தார்.

மேற்படி சந்திப்பில் வடமாகாண இணையத்தின் தலைவர் எம். ஆலம், பொருளாளர்

ஏ.மரியதாஸ், செயலாளர் என்.பி. சுப்பிரமணியம், உபதலைவர் யோசப்

பிரான்சிஸ், தேசிய முpனவ ஒத்துளைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர்

அன்ரனி யேசுதாஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

SHARE