முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீன்பிடிக்கு சென்ற கேப்பாபுலவைச் சேர்ந்த 36 வயதான சௌவுந்தராஜன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை குறித்த இடத்திற்கு வந்த மாவட்ட நீதிபதி முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சடலம் சட்டவைத்திய அதிகாரியின் ஆய்விற்காக அனுப்பிவைக்கப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.