முல்லைத்தீவு பிரதான சந்தை மற்றும் தண்ணீரூற்று முள்ளியவளை சந்தைகளில் மரக்கறியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி 1 கிலோ பாவற்காய் 230.00 ரூபாய், பயிற்றங்காய் 145.00 ரூபாய், தக்காளிப்பழம் 80.00 ரூபாய், கத்தறிக்காய் 90.00 ரூபாய், ஒருபிடி கீரை 40.00 ரூபாய், தேசிக்காய் ஒன்று 30.00 ரூபாய், உருளைக்கிழங்கு 90.00 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதன் காரணமாக வறுமைக்கோட்டின் கீழ்வாழும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சியின் காரணத்தினால் மரக்கறித் தோட்டங்கள் பல அழிவடைந்துள்ளன.
இந்த நிலையில் மரக்கறியின் விலைகள் அதிகரிப்பதற்கு வறட்சியும் ஒரு காரணம் என சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.