முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பால் பதனிடும் நிலையம் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானியர் எம்.எஸ்.வைற் அவர்களினால் கையளிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு கால்நடை அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் அ.புஸ்பராஜா அவர்களின் தலைமையில் 11.05.2016. அன்று இடம் பெற்ற நிகழ்வில் 11 மில்லியன் ரூபா செலவில் கனடா நிதியுதவியுடன் புனர்நிர்மானம் செய்யப்பட்டு வைபக ரீதியாக கனடா நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானியர் எம்.எஸ்.வைற் அவர்களினால் வைபக ரீதியாக இச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன் நோக்கம் இப் பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்குவேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்காகவும் இப் பிரதேசத்திலுள்ள கால்நடை உரிமையாளர்களுக்கு நியாயமான விலையில் பாலை கொள்வனவு செய்வதும் இந் நிலையத்தில் பால் பதனிடப்பட்டு யோக்கற் தயிர், யூஸ், நெய், ரொபி போன்ற உற்பத்திகள் செய்யப்பட்டு இந்நிலையத்தில் விற்பனை செய்யப்படும்.
இந் நிகழ்விற்கு இலங்கைக்கான வதிவிட ஐ.நா பிரதிநிதி பீற்றர் அவர்களும் டொக்டரர் களிபர் கனேடிய உயர்ஸ்தானிகர் ஆலய அலோசகர் அவர்களும் இலங்கைக்கான யு.என்.டீ.பீ உதவி பணிப்பாளர் ஆர்.கணேசராசா அவர்களும் முல்லை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் கூட்டுறவு அ.உ.ஆணையாளர். உதவிப்பணிப்பாளர்.கால்நடை சுகாதார திணைக்கள அதிகாரி. புதுக்குடியிருப்பு கால் நடை வைத்தியர். யூ.என்.டீ.பீ. நிறுவன பணியாளர்கள்.எவ்.எ.ஓ.நிறுவன பண்னையாளர்கள் உறுப்பினர்கள் பணிப்பாளர்கள்.ஆகியோரும் பிரதம ரீதியாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
புளியங்குளம், கோபிகா.