பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தை முன்னிட்டு அமைச்சர்கள், எம்.பிக்கள், மகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரை இடை மறித்து புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் பிரதேச செயலகம் முன்பாக 19.09.2016 அன்று 9.00 மணியளவில் தங்களுக்கு நிரந்தர வீட்டினைப் பெற்றுத்தரக்கோரியும் 5வருடம் மீள் குடியேற்றம் செய்யப்பட்டும் இதுவரைக்கும் இராணுவத்தின் வசம் இருக்கும் தங்கள் சொந்தக் காணிகளையும், வீடுகளையும் மீளப் பெற்றுத்தரக்கோரியும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் கோரிக்கை மனுவினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரணவநாதன், அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களிடமும் மக்களால் கையளிக்கப்பட்டதையடுத்து வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தியானந்தன், சி.சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா ஆகியோரும் இணைந்து மக்கள் தொடர்பான பிரச்சினைக்கான தீர்வினை கௌரவ பிரதமர் ரணில் விக்ரம சிங்கவிடம் 21.09.2016 அன்று கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படுமென உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோபிகா, புளியங்குளம்.