ஒட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள பெரியகுளம் கிராம சேவகர் பிரிவில் கடந்த ஒருவார காலமாக காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுந்து விவசாயச் செய்கைகளை தொடர்ச்சியாக அழித்து வந்த யானைகள் மக்கள் குடிமனைக்குள் புகுந்து இரவு வேளைகளில் காட்டு யானைகள் வீடுகளை உடைத்து வீட்டுக்குள் இருந்த நெல், சாப்பாட்டுப் பொருட்களைச் சாப்பிட்டும், சேதப்படுத்தியும் வருகின்றது.
மக்கள் கிராமசேவையாளருக்கு முறையிட்டு அதனை கிராமசேவையாளர் நேரில் பார்வையிட்டுள்ளார். மக்கள் இந்த அழிவுகளுக்கான நஷ்ட ஈட்டினையும், பாதுகாப்பு வேலிகளையும் அமைத்துத் தரும்படி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோபிகா, புளியங்குளம்.