தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வடக்கு கிழக்கில் இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் முழுப்பணிதவிர்ப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த வகையில் முல்லைத்தீவின் ஐந்து பிரதேசங்களிலும் பணிகள் அனைத்தும் முடங்கின. வர்த்தக நிலையங்கள் அங்காடிகள் என அனைத்தும் பூட்டப்பட்டு இயல்பு நிலை முடங்கியது.
மாணவர்கள் பாடசாலை செல்லவில்லை. தனியார் போக்குவரத்து, தானிகள்(ஆட்டோக்கள்) என அனைத்தும் பணிதவிர்ப்பு செய்தன.
இ.போ.ச போக்குவரத்து பேரூந்துகளில் ஒரு சில மட்டும் போக்குவரத்து சேவையயை முன்னெடுத்திருந்தன. ஏனைய பணிகள் யாவும் முடங்கி முல்லைத்தீவு மாவட்டம் வெறிச்சோடிக்காணப்பட்டது.