முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள தலைவர்களுடன் நந்திக்கடல் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் விசேட கலந்துரையாடல் – வடக்கு மீன்பிடி அமைச்சர்…

327

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள தலைவர்களுடன் நந்திக்கடல் சட்டவிரோத மீன்பிடி தொடர்பில் விசேட கலந்துரையாடல் – வடக்கு மீன்பிடி அமைச்சர்…

நந்திக்கடலில் சட்டவிரோத மீன்பிடி முறையில் ஈடுபடுபவர்களை கைது செய்யாது ஆதரவு வழங்குவதாக வந்த தகவலை தொடர்ந்து 24-07-2015 வெள்ளி மதியம் 1:00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட விசேட சந்திப்பில் அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் திரு.ஜெ.சுதாகர் அவர்களும் மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் திரு கா.மோகனகுமார் அவர்களும் முல்லை வடக்கு கடற்றொழில் பரிசோதகர் திரு.வி.சிவதீபன் அவர்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கி.அகிலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது 2013இ 2014இ 2015 ஆம் ஆண்டுகளில் அங்கு சட்டவிரோத தொழில் முறைகளில் ஈடுபட்டோரை தாம் முறையாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளதாகவும்இ இப்போதும் அவ்வாறே தாம் தமது கடமையை சரியான முறையில் செய்து வருவதாகவும் அது தொடர்பான ஆவணங்களையும் அமைச்சருக்கு வழங்கி வைத்தனர்.

தொடர்ந்து அமைச்சர் தனது கருத்தை தெரிவிக்கையில் இவ்வாறு தமது கடமைகளை சரியான முறையிலே செய்து வரும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் திணைக்களம் மீதும் அதன் அதிகாரிகள் மீதும் தேவையற்ற விசாரனைய்ற தகவல்களை வெளியிடுவதை தவிர்க்குமாறும்இ அவ்வாறு சட்டவிரோத தொழில் தொடர்பில் தகவல் கிடைத்தால் அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த திணைக்களத்துக்கு ஆதரவு வழங்குமாறும்இ இனிவரும் காலங்களில் இவ்வாறு தேவையற்ற வீண் குற்றச் சாட்டுக்களை திணைக்களம் மீதோ அல்லது அதன் அதிகாரிகள் மீதோ சுமத்தாது அவர்களது கடைமைகளை திறம்பட நடாத்த உதவி செய்யுமாறும் தாம் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

unnamed (25) unnamed (26) unnamed (27) unnamed (28)

SHARE