முல்லைத்தீவு மாவட்ட மக்களின் மிகவும் பிரச்சனையாக உள்ளது மின்சார பிரச்சனை. 100 நாள் வேலை திட்டத்தில் மைத்திரி அரசாங்கம் கூறி உள்ளது அனைவருக்கும் மின்சாரம் கிடைக்கும் என, ஆனால் இங்கு நடப்பது வேறு விதமாக உள்ளது.
முல்லைத்தீவு மின்சார சபையினர் மக்களை வாட்டி வதைக்கும் செயலால் மக்கள் மிகவும் வேதனையும் மன உளைச்சலும் அடைந்து உள்ளனர்.
மக்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான மின்சார இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் திங்கட்கிழமை மற்றும் புதன் கிழமைகளில் மட்டுமே வழங்க முடியும்.
இவ்வாறு விண்ணப்பப்படிவம் வழங்க முல்லைத்தீவு மின்சாரசபை அலுவலகத்துக்குச் செல்லும் மக்களை மின்சார சபையினர் காலை 8 மணியில் இருந்து மாலை 2 மணிவரை அலுவலக வாசலில் காவல் காக்க வைத்து விட்டு விண்ணப்பப்படிவம் பெறவேண்டிய அதிகாரிகள் மக்களை கண்டு கொள்ளாமல் அவர்கள் தொலைபேசியும் கையுமாக இருந்து விட்டு 2 மணிக்கு பின்பு தான் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்கிறார்கள். இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளால் மக்கள் அவலநிலைக்கு உள்ளாகியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.