முல்லைத்தீவு வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

204

முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும், சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் சைக்கிளில் பயணித்த நபர் காயமடைந்து, அவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE