முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் இரவு  உறங்கும் மீனவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்.

284

வட்டுவாகல் பாலம்

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் இரவு தொழிலில் ஈடுபடும் சில மீனவர்கள் பாலத்தில் அலட்சியமாக பாடுத்து உறங்குவதாக தொரிவிக்கப்படுகின்றது.

யுத்த பாதிப்புக்கு உள்ளாகி இன்னமும் புனரமைப்பு செய்யப்படாத வட்டுவாகல் பாலத்தில் ஒருவழி பயணத்தையே மேற்கொள்ள முடியும்.

இந்நிலையில் இப்பாலத்தில் சில மீனவர்களின் நள்ளிரவில் அலட்சியமாக நித்திரை செய்வதை அவதானிக்க முடிகின்றது.

இதனால் சம்பந்தப்படும் மீனவர்களின் உயிருக்கும் உத்தரவாதம் எதுவும் காணப்படவில்லை. அத்தோடு போக்குவரத்துக்களும் பாதிப்பு ஏட்பட்டுள்ளது.

சென்ற மாதம் இப்பாலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE