முல்லைத்தீவு காரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குமிழமுனையில் வனவள திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியில் முறையற்ற வகையில் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அமைச்சர் ஒருவரின் நியாயமற்ற செயற்பாட்டால் கையகப்படுத்த முஸ்லிம்கள் முயல்வதாக மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதனின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
முல்லைத்தீவு மக்களின் கோரிக்கையினை அடுத்து விடயம் தொடர்பாக ஆராய கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த குமிழமுனை பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நேரின் சென்று நிலமைகளை அவதானித்தார்.