முல்லை குமுளமுனை பகுதியில் தேசிய இளைஞர் மன்றம் மற்றும் மக்கள் பங்களிப்புடன் பொது நூலகமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த நூலகத்தினை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் கடந்த 2016-03-17ம் நாளன்று திறந்து வைத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இலங்கை இளைஞர் பாராளுமன்ற செயற்றிட்டத்தின் கீழ் கரைதுறைப்பற்று இளைஞர் சம்மேளனம் குமுளமுனை மத்தி கிராம அலுவலர் பிரிவில் பொது நூலகத்தின் உருவாக்கத்திற்கு உதவ முன்வந்தனர்.
இந்நிலையில் இளைஞர் கழக உறுப்பினர்கள் தங்களுடைய முயற்சியால் மக்களிடமும் உதவிகளைப் பெற்று சமூகத்துடன் இணைந்து பொதுமக்களின் அபிலாசையினை நிறைவேற்றும் வகையில் கையளிக்கப்பட்டது.
இளைஞர் கழக குமணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்பான நிகழ்வில் துரைராசா ரவிகரன் அவர்களுடன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சதீஸ்கரன் அவர்களும் ஓய்வு பெற்ற அதிபர் இராஜேஸ்வரன் அவர்களும் கரைதுறைப்பற்று பல நோக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவர் மயூரன் அவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.



