முல்லை பீனிக்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் வல்வை எப்.சி விளையாட்டுக் கழகத்திற்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை எப்.சி விளையாட்டுக் கழகம் 5.0 என்கின்ற கோல் கணக்கில் முல்லை பீனிக்ஸ் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தியது.
வல்வை எப்.சி சார்பில் 11வது நிமிடத்தில் பிறேம்குமார் முதலாவது கோலினை போட்டு தனது அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
43வது நிமிடத்தில் இரண்டாவது கோல் ஞானரூபனால் பெறப்பட்டது.
45வது நிமிடத்தில் மதுசனால் மூன்றாவது கோல் பெறப்பட்டது.
53வது நிமிடத்தில் ஞானரூபன் மீண்டும் ஒரு கோலினை போட்டு அணியின் கோல் எண்ணிக்கையினை நான்காக உயர்த்தினார்.
67வது நிமிடத்தில் பிறேம்குமார் மீண்டும் ஒரு கோலினை போட்டு ஆணிக்கான ஐந்தாவது கோலினை பெற்றுக்கொடுத்தார்.
ஆட்டமுடிவு வரை முல்லை பீனிக்ஸ் அணியினர் கோல் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக வல்வை எப்.சி அணியின் பிறேம்குமார் தெரிவுசெய்யப்பட்டார்!